பாகுபலி 2 வசூலை முந்தியது பதான்

பாகுபலி 2 வசூலை முந்தியது பதான்
Updated on
1 min read

ஷாருக்கான் 4 வருடங்களுக்குப்பின் நடித்து வெளியான படம், ‘பதான்’. இதில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உட்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்தது. ஜனவரி 25ம் தேதி வெளியான இந்தப் படம், முதல் நாளில் இருந்தே வசூல் சாதனைப் படைத்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இந்திய வசூல் சாதனையை முறியடித்த நிலையில், இப்போது ‘பாகுபலி 2’ வசூலைத் தாண்டி இருக்கிறது. ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி 2’ ரூ.510.99 கோடி வசூலித்து இந்தியில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை செய்திருந்தது. ரூ528.89 கோடி வசூலித்து அதை ‘பதான்’ முறியடித்துள்ளது. இதுபற்றி தெரிவித்துள்ள இயக்குநர் சித்தார்த் ஆனந்த், “இந்தியில் ‘பாகுபலி 2’ வசூலை, ‘பதான்’ கடந்துள்ளது. பார்வையாளர்களுக்கு நன்றி” தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in