

ஜூலி 2 பட நாயகி நடிகை ராய் லட்சுமிக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும் இடையே நட்புறவுகள் இருந்ததாக ஒருகாலத்தில் செய்திகள் வந்தன. ஆனால் இன்று நடிகை ராய் லட்சுமி தோனி குறித்து ‘யார் அவர்?’ என்று கேட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
2008-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் விளம்பரத் தூதராக இருந்தார் ராய் லட்சுமி, அப்போது இவருக்கும் தோனிக்கும் இடையேயான நட்பு பற்றி செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்ததாக கருதப்பட்டு வந்த உறவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
இந்நிலையில் முன்னணி பொழுதுபோக்கு தளம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்த போது தோனியின் பெயர் குறிப்பிடப்பட்டது, உடனே அதற்கு ராய் லஷ்மி, ‘யார் அவர்?’என்று கேட்டது பலரது புருவத்தையும் உயரச்செய்துள்ளது.
ஆனால் மேலும் அவர் விளக்கம் கூறிய போது, தான் தோனியை மதிப்பதாகவும் இப்படிப்பட்ட விஷயங்கள் இனி முடிவுகட்டப்பட வேண்டியதாகும் என்றார்.
மேலும், தோனி திருமணமாகி குடும்ப வாழ்க்கையை தனது குழந்தையுடன் மகிழ்ச்சியாக நடத்தி வருகிறார். எனவே இனி தொடர்பு படுத்தி பேசும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.
தங்கள் இருவருக்கிடையேயான நட்பானது நீண்ட காலத்திற்கு முந்தையது, சில வேளைகளில் இவற்றையெல்லாம் கடந்து நகர வேண்டிய தேவை உள்ளது.
அப்போது தனக்கும் தோனிக்கும் திருமணம் என்று செய்திகள் பரப்பப்பட்டன என்றும் அது இருவருக்குமிடையேயான உறவை தர்மசங்கடத்துக்குள் தள்ளியது என்றும் கூறிய ராய் லஷ்மி. தோனி மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும் இனி அதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
“அப்போது எங்கள் இருவரைப் பற்றியும் வந்த வதந்திகள் எங்களை சங்கடமான நிலைக்குத் தள்ளியது, அதனால்தான் நான் ஊடகங்களிடம் இது பற்றி அதிகம் பேசாமல் தவிர்த்தேன். இப்போது கொஞ்சம் பேசுகிறேன்” என்றார்.
ஜூலி 2 படம் அக்டோபர் 6-ம் தேதி திரைக்கு வருகிறது.