மீண்டும் கால்களைக் காட்டி பதிலடி தந்த பிரியங்கா சோப்ரா

மீண்டும் கால்களைக் காட்டி பதிலடி தந்த பிரியங்கா சோப்ரா
Updated on
1 min read

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போது, கால்கள் தெரியும் விதமாக உடை அணிந்ததால் வசை பாடப்பட்ட பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, மீண்டும் கால்கள் தெரியும் விதமான ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து தன்னை வசை பாடியவர்களுக்கு பதிலடி தந்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா நடிப்பில் 'பே வாட்ச்' ஹாலிவுட் திரைப்படம் இந்த வாரம் ஜெர்மனி உள்ளிட்ட மற்ற நாடுகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சோப்ரா ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருப்பது தெரிந்து, அவரை நேரில் சென்று சந்தித்தார்.

சோப்ரா பிரதமரை சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் பிரியங்கா சோப்ரா, அவரது கால்கள் தெரியும் விதமாக உடை அணிந்திருந்தார். இதனால் சமூக வலைதளங்களில் பலர் அதை விமர்சித்திருந்தனர். நாட்டின் பிரதமருக்கு முன்னால் இப்படியான கவர்ச்சி உடை அணிந்திருக்கக் கூடாது என்ற ரீதியில் பலர் அவரை வசை பாட ஆரம்பித்தனர்.

இதற்கெல்லாம் பதில் சொல்லும்விதமாக சோப்ரா தனது இன்ஸ்டகிராம் கணக்கில் இன்று மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது அம்மா மதுவுடன் பிரியங்கா சோப்ரா இருக்கும் இந்த புகைப்படத்தில் சோப்ரா தனது கால்கள் தெரியும்படியும், அவரது அம்மா மது ஷார்ட் ஸ்கர்ட்டும் அணிந்துள்ளனர். இந்த படத்துக்கு "என்றும் கால்கள் தான், அது மரபணுக்களில் இருப்பது" என்று தலைப்பு வைத்துள்ளார்.

இந்த படத்துக்கு இதுவரை 3.5 லட்சம் லைக்குகளுக்கு மேல் குவிந்துள்ளன. அங்கும், பிரியங்கா சோப்ராவை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என நெட்டிசன்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டகிராம் புகைப்படத்துக்கான லிங்க் - >http://bit.ly/2rjDmGl

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in