இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சோனு நிகம் மீது தாக்குதல்

 இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சோனு நிகம் மீது தாக்குதல்
Updated on
1 min read

மும்பை: இசை நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாடகர் சோனு நிகம் மற்றும் அவரது பாதுகாவலர்கள் தாக்குதலுக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் பிரபலமான பாடகர் சோனு நிகம். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். தமிழில் ‘வாராயோ தோழி’, ‘விழியில் உன் விழியில்’ உள்ளிட்ட பல பாடல்களை பாடியிருக்கிறார்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் திங்கள்கிழமை நடந்த இசை நிகழ்வு ஒன்றில் சோனு நிகம் மற்றும் அவரது பாதுகாவலர்களை சிவசேனா எம்எல்ஏ பிரகாஷ் என்பவரின் மகன் மற்றும் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதில் சோனு நிகமுக்கு காயம் ஏற்படவில்லை எனினும், அவரது பாதுகாவலர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எனினும், இசை நிகச்சி தொடர்பான வாக்குவாதத்தில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சோனு நிகம் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in