துருக்கி நிலநடுக்கம் - சன்னி லியோன் உதவி

துருக்கி நிலநடுக்கம் - சன்னி லியோன் உதவி
Updated on
1 min read

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. இந்நிலையில் நடிகை சன்னி லியோனும் அவர் கணவர் டேனியல் வெபரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். அவர்களுடைய ஒப்பனை பிராண்டின் பிப்ரவரி மாத வருவாயில் 10 சதவிகிதத்தை நிவாரணத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி சன்னி லியோன் கூறும்போது, “உலகம் முழுவதும் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து தேவைப்படுபவர்களுக்குக் கைகொடுக்க வேண்டியது இப்போது அவசியம். நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்கள், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப, எங்களுடன் இணைந்து உதவக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in