சீனாவில் 750 கோடி வசூலைத் தாண்டி தங்கல் சாதனை

சீனாவில் 750 கோடி வசூலைத் தாண்டி தங்கல் சாதனை

Published on

சீனாவில் மட்டும் சுமார் 750 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது ஆமீர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்'

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியான படம் 'தங்கல்'. 2016-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியளவில் 500 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளிலும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது சீனாவில் இப்படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. அங்கும் வசூலைக் குவித்து வருகிறது.

சீனாவில் 'தங்கல்' வெளியான 5 நாட்களில் 123.67 கோடி வசூல் செய்திருப்பதாக பாலிவுட் திரையுலகின் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய வசூலைத் தாண்டி சீனாவில் வசூல் சாதனை படைத்துள்ளது. அங்கு சுமார் 750 கோடி வசூலை கடந்துள்ளது 'தங்கல்'. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. சீனாவில் சுமார் 9000 திரையரங்குகளில் வெளியாகி, தற்போது மக்கள் கூட்டம் அதிகமாகவே இருப்பதால் ரூ.1000 கோடி வசூலைத் தொட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன்.

'3 இடியட்ஸ்', 'பி.கே' ஆகிய படங்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அமீர்கானின் 'தங்கல்' படமும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in