“அர்பன் நக்ஸல்களை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ தொந்தரவு செய்கிறது” - பிரகாஷ்ராஜை விமர்சித்த அக்னிகோத்ரி

“அர்பன் நக்ஸல்களை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ தொந்தரவு செய்கிறது” - பிரகாஷ்ராஜை விமர்சித்த அக்னிகோத்ரி
Updated on
1 min read

“தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெளியாகி ஓராண்டு கழித்தும் அர்பன் நக்ஸல்களுக்கு படம் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது” என்று அந்தப் படத்தின் இயக்குநர் அக்னிகோத்ரி தெரிவித்துள்ளார்.

கேரள இலக்கிய விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் ஓர் அபத்தமான படம். அதற்கு ஆஸ்கர் இல்லை, பாஸ்கர் கூட கிடைக்காது. இது பிரச்சார பாணியிலான திரைப்படம். அவர்களுக்கு (இந்து மத அடிப்படைவாதிகள்) குரைக்க மட்டுமே தெரியும். கடிக்கத் தெரியாது.

‘பதான்’ திரைப்படத்தை புறக்கணிக்க முயற்சி செய்தனர். ஆனால், அப்படம் ரூ.800 கோடி வசூலித்துள்ளது. இந்த முட்டாள்களால் மோடி குறித்த படத்தை ரூ.30 கோடிக்குக் கூட ஓடவைக்க முடியவில்லை’’ எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற சிறிய, மக்களுக்கான திரைப்படம் பல அர்பன் நக்சல்களுக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்துள்ளது. அதன் பார்வையாளர்களை குரைக்கும் நாய் என அழைக்கும் ஒருவருக்கு படம் வெளியாகி ஓராண்டு கழித்தும் தொந்தரவு செய்கிறது. மிஸ்டர்.அந்தகர்ராஜ் (இருள் ராஜ்) பாஸ்கர் எப்படி எனக்குக் கிடைக்கும்? அது உங்களுடையது’’ என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in