100-க்கும் மேற்பட்ட நாடுகளின் உணவு வகைகள்: சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி திருமணத்தில் அசத்தல்

100-க்கும் மேற்பட்ட நாடுகளின் உணவு வகைகள்: சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி திருமணத்தில் அசத்தல்
Updated on
1 min read

நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும், நடிகை கியாரா அத்வானியும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இருவரும் விழாக்களுக்கு ஒன்றாக சென்றுவந்தபோதும் தங்கள் காதல் பற்றி தெரிவிக்கவில்லை.

இவர்கள் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்த நிலையில் பிப்.7ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள சூர்யஹர் அரண்மனை ஓட்டலில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி இவர்கள் திருமணம் நேற்று நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கரண் ஜோஹர், ஷாகித் கபூர், ஜூஹி சாவ்லா உட்பட பல பாலிவுட் திரையுலகினர் கலந்து கொண்டனர்.

விழாவில் இத்தாலி, சீனா, அமெரிக்கா, மெக்சிகன் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் உணவு வகைகள் பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் புதுமணத் தம்பதிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in