வீட்டுக்குள் நுழைந்து தாக்குவேன் - கங்கனா ரனாவத் எச்சரிக்கை

வீட்டுக்குள் நுழைந்து தாக்குவேன் - கங்கனா ரனாவத் எச்சரிக்கை
Updated on
1 min read

நடிகை கங்கனா இந்தியில் ‘எமர்ஜென்சி’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கி நடித்து வருகிறார். தமிழில்,‘சந்திரமுகி 2’ படத்தில் நடிக்கிறார். அவர் பிரபல பாலிவுட் நடிகர் தன்னை வேவு பார்ப்பதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

தனது அடுக்குமாடி குடியிருப்பிலும், பால்கனியிலும், பார்க்கிங் பகுதியிலும் மொட்டை மாடியில் கூட ஜூம் லென்ஸ்கள் வைத்து வேவு பார்த்து வருகிறார்கள் என்றும் வாட்ஸ் அப் தரவுகள், தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் கூட கசிவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். யார் பெயரையும் குறிப்பிடாமல் அவர் கூறியிருந்தாலும் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடியைதான் கங்கனா குறிப்பிட்டுள்ளதாக கூறிவருகின்றனர்.

இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், என்னைப் பற்றி கவலைப்படுபவர்கள், நேற்றிரவு முதல் என்னைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். யாரும் என்னை பின் தொடரவில்லை. சொல்வதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு, விஷயங்களைப் புரிய வைக்க வேறு வழி தேவை.உங்கள் வழியை சரி செய்துகொள்ளுமாறு எச்சரிக்கிறேன். இல்லை என்றால் வீட்டுக்குள் நுழைந்து தாக்குவேன். என்னை பைத்தியம் என்று அழைப்பவர்களுக்கு கூட, நான் எந்த அளவிற்குச் செல்வேன் என்பது தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in