கியாரா அத்வானியை கரம்பிடித்தார் சித்தார்த் மல்ஹோத்ரா

கியாரா அத்வானியை கரம்பிடித்தார் சித்தார்த் மல்ஹோத்ரா
Updated on
1 min read

ஜெய்சால்மர்: பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது காதலி கியாரா அத்வானியை மணந்துள்ளார். இவர்கள் திருமணம் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடந்துள்ளது.

பாலிவுட் சினிமாவின் காதல் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் நீண்ட நாள்களாகவே திருமண பந்தத்தில் இணையவிருப்பதாக சொல்லப்பட்டது. 2018ல் வெளிவந்த ஆந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின்போது இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டனர். இதன்பின் தமிழ் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கிய ஷெர்ஷா படத்தில் ஒன்றாக நடித்தனர். பாக்ஸ் ஆபீஸில் இப்படம் பெரிய வசூலை குவித்தது. அதேநேரம், இந்தப் படத்தில் இருந்து இருவரும் காதலர்களாக சுற்றிவந்தனர்.

இதனிடையே, தான் நேற்று இரவு இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். கியாரா வலைதளத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து, "எங்களின் புதிய பயணத்தில் உங்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறோம்" என்று பதிவிட்டுளளார். திருமணத்தில் கரண் ஜோஹர், ரோஹித் ஷெட்டி என முன்னணி பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

கியாரா அத்வானி அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். அதே நேரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ரோஹித் ஷெட்டி இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துவருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in