Published : 22 Jan 2023 05:50 PM
Last Updated : 22 Jan 2023 05:50 PM

அக்‌ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மியின் ‘செல்ஃபி’ ட்ரெய்லர் எப்படி?

அக்‌ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஷ்மி இணைந்து நடித்துள்ள ‘செல்ஃபி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

ராஜ் மேத்தா இயக்கத்தில் அக்‌ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி, நுஷ்ரத் பருச்சா, டயானா பென்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘செல்ஃபி’. தர்மா புரொடக்ஷனுடன், பிரித்விராஜ் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படம் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ‘டிரைவிங் லைசன்ஸ்’ படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: ஒட்டுமொத்த கதையையும் சொல்லும் வகையில் 3 நிமிட ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒருவருடன் காவல்துறை அதிகாரி மற்றும் அவரது மகன் இணைந்து செல்ஃபி எடுக்க போராடுகின்றனர். இறுதியில் அந்த உச்சபட்ச நடிகரின் உண்மை முகம் மாற அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் படத்தின் கதையாக ட்ரெய்லர் சொல்லும் செய்தி. ட்ரெய்லரைப் பார்க்கும்போது அக்‌ஷய் குமார் - இம்ரான் ஹாஷ்மி இருவரின் கெமிஸ்ட்ரியும் பொருந்துகிறது. ‘விஜய் சார் எல்லாருக்கும் ஹீரோ. ஆனால் எனக்கு நீங்கள் தான் ஹீரோ’ போன்ற சென்டிமென்ட் வசனங்களும் கவனம் பெறுகின்றன. படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x