“ஷாருக்கான் யார்...? அவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது” - அசாம் முதல்வர் 

“ஷாருக்கான் யார்...? அவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது” - அசாம் முதல்வர் 
Updated on
1 min read

“ஷாருக்கான் யார்? அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ பாடலில் தீபிகா படுகோன் காவி உடை அணிந்திருந்ததற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை தடை செய்யவேண்டும் என கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் மாநிலத்தில் பஜ்ரங் தள் அமைப்புகள் நடத்தி வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இந்த பிரச்சினை குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலர் என்னை தொடர்பு கொண்ட போதிலும், ஷாருக்கான் என்னை அழைக்கவில்லை. ஆனால், அவர் அழைத்தால் இந்த விஷயத்தில் நான் தலையிட்டு என்ன பிரச்னை என்பதை பார்ப்பேன். சட்ட ஒழுங்கு மீறப்பட்டிருந்தால், சட்டத்தினை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதனிடையே ‘பதான்’ திரைப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in