‘எமர்ஜென்சி படத்திற்காக எனது அனைத்து சொத்துக்களையும் அடமானம் வைத்தேன்’ - நடிகை கங்கனா ரனாவத்

‘எமர்ஜென்சி படத்திற்காக எனது அனைத்து சொத்துக்களையும் அடமானம் வைத்தேன்’ - நடிகை கங்கனா ரனாவத்
Updated on
1 min read

'எமர்ஜென்சி' படத்திற்காக தனது சொத்துகள் அனைத்தையும் அடமானம் வைத்துள்ளதாக படத்தை இயக்கி, தயாரித்து வரும் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகும் படம் 'எமர்ஜென்சி'. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். அத்துடன், படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார் ரித்தேஷ் ஷா. இந்நிலையில் கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது சொத்துகளை அடமானம் வைத்து படத்தை தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு நடிகராக நான் ‘எமர்ஜென்சி’ படப்பிடிப்பை முடித்துள்ளேன். என் வாழ்க்கையின் ஒரு மகத்தான புகழ்பெற்ற கட்டம் அதன் முழு நிறைவுக்கு வருகிறது. நான் இதில் வசதியாக பயணம் செய்ததாக தோன்றலாம். ஆனால் உண்மை அதிலிருந்து விலகியிருக்கிறது. என் அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்து படத்தை தயாரித்து வருகிறேன். முதல்கட்ட படப்பிடிப்பின்போது டெங்குவால் பாதிக்கப்பட்டேன். ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும் படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஒரு தனிநபராக நான் நிறையவே சோதிக்கப்பட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in