

பிரபல இந்தி நடிகர் ரன்தீப் ஹூடா. இவர் இப்போது ‘தேரா கியா ஹோகா லவ்லி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் இலியானா நாயகியாக நடிக்கிறார். நடிகர் ரன்தீப், மும்பையில் அடிக்கடி குதிரை சவாரி செய்வது வழக்கம். சமீபத்தில் அவர் குதிரை சவாரி செய்துகொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் ஓய்வில் இருக்கும்படி தெரிவித்துள்ளனர்.