

திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி மகாபாரத இதிகாசத்தை படமாக எடுத்தால், அதில் கிருஷ்ணன் அல்லது கர்ணன் பாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று அமீர்கான் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை பேசிய அமீர்கான், ''நான் ராஜமவுலி படங்களின் மிகப்பெரிய ரசிகன். என்றாவது ஒருநாள் அவர் மகாபாரதத்தைப் படமாக எடுத்தால், அதில் கிருஷ்ணனாகவோ அல்லது கர்ணன் கதாபாத்திரத்திலோ நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் கிருஷ்ணனாக நடிக்கத்தான் அதிகம் விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
'தங்கல்' படத்தின் தெலுங்குப் பதிப்பு புரொமோஷனுக்காக ஹைதராபாத் வந்திருந்த அமீர்கான், ''நடிகர் பவன் கல்யாணுடன் நடிக்க விரும்புகிறேன். அவரின் சகோதரர் சிரஞ்சீவியின் நடிப்பும் எனக்குப் பிடிக்கும்'' என்றும் கூறியுள்ளார்.
நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கல்'. டிசம்பர் 23-ம் தேதி படம் வெளியாகும் நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் 'தங்கல்' டப்பிங் செய்யப்பட்டுள்ளது.