அம்மாவுக்கு புற்றுநோய் - ராக்கி சாவந்த் கண்ணீர்

அம்மாவுக்கு புற்றுநோய் - ராக்கி சாவந்த் கண்ணீர்
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில், ‘என் சகியே’, ‘முத்திரை’ படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அவர் தாயார், ஜெயந்தி சாவந்துக்கு மூளைகட்டி மற்றும் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ‘பிக்பாஸ் மராத்தி’ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ராக்கி சாவந்த், அதில் இருந்து வெளியேறினார். அவர் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளி யிட்டுள்ளார்.

அதில், “என் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. மருத்துவமனையில் கேன்சருடன் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு மூளையில் கட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள்” என்று அதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் நலம் பெற ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in