

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படம் 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடலில் தீபிகா, காவி நிறத்தில் நீச்சல்உடை அணிந்து கவர்ச்சியாக ஆடியுள்ளார். இதற்கு பாஜகமற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்புதெரிவித்தன. அதை நீக்கவில்லை என்றால் படத்தை வெளியிட மாட்டோம் என்று கூறியுள்ளன.
இந்நிலையில் இந்தப் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. அதிகாரிகள் 13 இடங்களில் கட் கொடுத்தனர். அதில் சர்ச்சைக்குரிய பாடலில் இடம்பெற்றுள்ள சில குளோசப் காட்சிகள் மற்றும் தீபிகாவின் ‘சைட் போஸ்’ காட்சிகளை நீக்கியுள்ளனர். ஆனால், காவி பிகினி பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை.