சினிமா துளிகள் | பிரபல நடிகை துபாயில் தடுத்து வைப்பு

சினிமா துளிகள் | பிரபல நடிகை துபாயில் தடுத்து வைப்பு
Updated on
1 min read

நடிகை துபாயில் தடுத்து வைப்பு: பிரபல இந்தி நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் வித்தியாசமாக அணியும் ஆடைகளுக்காகப் பிரபலமானவர். கயிறுகள், வெறும் நூல்கள், உடைந்த கண்ணாடிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவார். அவர் ஆபாசமாக உடையணிகிறார் என்று சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம். இதுகுறித்து மும்பையில் அவர் மீது புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு, வெளிப்படையான ஆடையணிந்து, பொதுவெளியில் வீடியோ எடுத்ததற்காக, துபாய் போலீஸார் அவரை தடுத்து வைத்துள்ளனர். திறந்தவெளியில், அனுமதிக்கப்படாத ஆடை அணிந்து படப்பிடிப்பு நடத்தியதால் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சினிமா துளிகள்:

> ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ வரும் 29-ம் தேதியும் ‘டிரைவர் ஜமுனா’ 30-ம் தேதியும் வெளியாகிறது.

> அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

> ‘வணங்கான்’ படத்தில் அதர்வா நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில் அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in