என்னை திமிரானவள் என்று கூறினாலும் எனக்குக் கவலையில்லை - டாப்ஸி ஆதங்கம்

என்னை திமிரானவள் என்று கூறினாலும் எனக்குக் கவலையில்லை - டாப்ஸி ஆதங்கம்
Updated on
1 min read

“ஊடகத்தினர் என்னைப் பார்த்து திமிரானவள் என்று கூட சொல்லட்டும். எனக்கு கவலையில்லை” என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

டாப்ஸி நடித்துள்ள ‘ப்ளர்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இது தொடர்பாக விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டாப்ஸி வந்திருந்தபோது கேமராமேன் சிலர் அவரது காரின் கதவை மறித்து வீடியோ எடுத்தனர். இதனால் கோபமடைந்த அவர், “நான் காருக்குள் போகும்போது காரின் கதவை பிடித்து காமிராவை முகத்துக்கு நேராக நீட்டினால்? இதேபோல உங்களுக்கு நடந்தால் எப்படி இருக்கும்? எனது தனிப்பட்ட வாழ்க்கைகுள் ஏன் வரவேண்டும். என்னை எரிச்சலடைய வேண்டுமென்றே இதை செய்கிறார்கள். ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்த மாதிரி செய்வது தவறு.

நான் பாதுகாவலர்கள் இல்லாமல் செல்வதால் இந்த மாதிரி காமிராவையும், மைக்கையும் முகத்துக்கு நேராக கொண்டு வருவதா? நான் பிரபலம் என்பதால் சாதாரண மனிதருக்கு கிடைக்கும் மூச்சுவிடும் அளவுக்கு கூட எனக்கு சுதந்திரம் தருவதில்லை. சாதராண மனிதருக்கு தரவேண்டிய மனிதநேயம் தராமல் இருந்துவிட்டு எனக்கு திமிர்தனம் என்று ஊடகத்தினர் சொன்னாலும் எனக்கு கவலையில்லை. நான் பெண் என்பதால் இதில் மழுப்பி சொல்ல மாட்டேன். நான் அந்த மாதிரி பெண் இல்லை. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல என்னிடமிருந்து பதில் வரும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in