நடிகையை கொன்று உடலை ஆற்றில்  வீசிய மகன்

நடிகையை கொன்று உடலை ஆற்றில்  வீசிய மகன்
Updated on
1 min read

இந்திப் படங்களிலும்,தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் வீணா கபூர் (74). இவர் மும்பை ஜுஹு பகுதியில் உள்ளஅடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள். மூத்தமகன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இளைய மகன் சச்சின் (43). இவருக்கும் வீணா கபூருக்கும் ரூ.12 கோடி மதிப்புள்ள சொத்து தொடர்பாக, தகராறு இருந்து வந்தது. பலமுறை வீணாவுடன் சச்சின் தகராறு செய்துள்ளார். இதுபற்றி போலீஸிலும் புகார் கொடுத்தார் வீணா.

இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில்ஆத்திரமடைந்த சச்சின்,உதவியாளர் சோட்டுவுடன் வீணாவை பேஸ்பால் மட்டையால் சரமாரியாகத் தாக்கிக் கொன்றார். உடலை 90 கி.மீ தூரத்தில் உள்ள ஆற்றில் வீசியுள்ளார்.சச்சினை கைது செய்த போலீஸார், இதுதொடர்பாக விசாரித்துவருகின்றனர். சொத்துக்காக பெற்ற தாயை, மகன் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in