Published : 11 Dec 2022 05:58 PM
Last Updated : 11 Dec 2022 05:58 PM

ரூ.200 கோடி க்ளப்பில் நுழைந்த அஜய் தேவ்கனின் ‘த்ரிஷ்யம் 2’ 

இந்தியில் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் உலக அளவில் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. இந்தப் படத்தின் வரவேற்பு காரணமாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் ரீமேக் செய்யப்பட்டது. இதையடுத்து 2021-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் ‘த்ரிஷ்யம் 2’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தை இந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக் பதாக்.

வியாகாம் 18 நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா, தபு, அக்‌ஷய் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 18-ம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாள் ரூ.15.38 கோடியை வசூலித்துள்ளது. இரண்டாம் நாள் ரூ.21.59 கோடியை வசூலித்து இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.36.97 கோடியை படம் வசூலித்துள்ளது.

10-வது நாளில் ரூ.141 கோடியை படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது படம் வெளியாகி 23 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், உலகம் முழுவதும் ரூ.203.59 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x