ஆர்பி என்றால் ரிஷப் பந்த்தா? - மனம் திறந்த ஊர்வசி ரவுதெலா

ஆர்பி என்றால் ரிஷப் பந்த்தா? - மனம் திறந்த ஊர்வசி ரவுதெலா
Updated on
1 min read

இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா. இவர் தமிழில் ‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி படத்தில் நடித்துள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“நான் ஆர்பி என்று குறிப்பிட்டது சக நடிகர் ராம் பொத்தினேனியை. ரிஷப்பையும் அப்படி அழைப்பது பற்றி எனக்குத் தெரியாது. இதை வைத்து, சமூக வலைதளங்களில் அவர்களின் யூகத்தை எழுதுகிறார்கள். இதுபோன்ற வதந்திகளை நம்புகிறவர்கள், முழுமையாக விசாரிக்க வேண்டும். நீங்கள் பார்க்காத ஒன்றை யாரோ சிலர் சொல்கிறார்கள் என்பதற்காக அதை எப்படி எளிதாக நம்பி விடுகிறீர்கள்?

கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களை விட அதிகம் மதிக்கப்படுவதைப் பார்க்கிறோம். அல்லது அவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பீடு முட்டாள்தனமானது. அவர்கள் நாட்டிற்காக விளையாடுகிறார்கள், அதனால் நேசிக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன். அதே போல நடிகர்களும் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்கள்” என்று ஊர்வசி ரவுதெலா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in