

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்வீர் சிங். பேண்ட் சர்மா பாராத் படத்தில் தொடங்கி 83 வரை நிறைய வெற்றிகள் கொடுத்துள்ளார். படங்களை விட சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குவது இவரது வழக்கம். 2018ம் ஆண்டு தீபிகா படுகோனை கரம் பிடித்த ரன்வீர், சமீபத்தில் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது சர்ச்சையை சந்தித்தார்.
இதனிடையே, தற்போது இவர் பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அபுதாபியில் நடைபெற்ற ஃபார்முலா 1 கார்பந்தய நிகழ்ச்சியை காண சமீபத்தில் சென்றிருந்தார் ரன்வீர். அப்போது அவரை நேர்காணல் செய்தார் செய்தார் முன்னாள் ஃபார்முலா ஒன் ரேஸர் மார்ட்டின் ப்ரண்டில். நேர்காணலின்போது ரன்வீர் யார் என்பதை மறந்த மார்ட்டின் உங்களை நீங்களே அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதற்கு சிரித்துக்கொண்டே, "நான் ஒரு பாலிவுட் நடிகர். இந்தியாவின் மும்பையைச் சேர்ந்தவன். நான் ஒரு எண்டர்டெயினர்" என்று பதில் கொடுத்துள்ளார் ரன்வீர். இந்த வீடியோ காட்சிகள் இப்போது வைரலாகி வருகிறது.