

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவான ‘ராம்சேது’ திரைப்படம் ஒட்டுமொத்த திரையரங்கு வசூலாக ரூ.73 கோடியை எட்டியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ராம் சேது’. ஜாக்லீன் பெர்னான்டஸ், நுஷ்ரத் பாருச்சா, சத்ய தேவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு டேனியல் ஜார்ஜ் இசையமைத்திருந்தார்.
ராமர் பாலத்தை அடிப்படை களமாக கொண்ட இப்படம் பான் இந்தியா முறையில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த இப்படம் ஒட்டுமொத்தமாக திரையரங்குகளில் ரூ.73 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.90 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.73 கோடி வரை மட்டுமே வசூலித்து நஷ்டத்தை சந்தித்துள்ளது. நடிகர் அக்ஷய் குமாரின் படங்கள் அண்மைக்காலமாக படுதோல்வியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது..