

பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார். இவர் நடித்து இந்த வருடம், ‘சாம்ராட் பிருத்விராஜ்’,‘பச்சன் பாண்டே’, ’ரக்ஷா பந்தன்’, ‘ராம் சேது’ ஆகிய 4 படங்கள் திரையரங்கில் வெளியாகின.
‘கட்புட்லி’ ஓடிடியில் வெளியானது. அனைத்தும் தோல்வி அடைந்தன. ஒரே நேரத்தில் பல படங்களில் கவனம் செலுத்தியதால்தான் ஒரு படமும் ஓடவில்லை என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் விழா ஒன்றுக்கு வந்த அக்ஷய் குமாரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பியதும் கோபம் அடைந்தார்.
அவர் கூறும்போது, “வருடத்துக்கு 4 படங்களில் நடிக்கிறேன். விளம்பரங்களில் நடிக்கிறேன். அது என் வேலை. நான் யாரிடமும் திருடவில்லை. எனக்கு இந்தக் கேள்வி புரியவில்லை. இதில் என்ன தவறு என்றும் புரியவில்லை. வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தால் யார் செய்யமாட்டார்கள்?” என்றார்.