

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஆண்ட்ரிலா சர்மா (24). 2 முறை கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்ட அவர், படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அவருக்கு சில நாட்களுக்கு முன், மூளை பக்கவாத நோய் ஏற்பட்டது. இதையடுத்து ஹவுராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைய திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.