

இந்தி நடிகர் வருண் தவண் ‘பெடியா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இது இந்தி மட்டுமின்றி, பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
இந்நிலையில், வருண் தவண் கூறும்போது, “இந்திய திரைப்படங்கள் இப்போது நன்றாக ஓடிக்கொண்டிருக்கின்றன. கே.ஜி.எஃப், காந்தாரா, விக்ரம் ஆகிய படங்கள் நன்றாக ஓடியிருக்கிறது. இந்தப் படங்களில் இருந்து உத்வேகம் பெற்று பணியாற்ற வேண்டும். எனக்கு தமிழ், தெலுங்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. லோகேஷ் கனகராஜ், ஷங்கர், எஸ்.எஸ்.ராஜமவுலி போன்ற இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்றும் ஆசை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். ‘பெடியா’ படத்தில் கீர்த்தி சனோன் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 25ம் தேதி வெளியாகிறது.