

நடிகரும் இயக்குநருமான மகேஷ் மஞ்சரேக்கர் மராத்தியில், ‘வேதத் மராத்தி வீர் தாவத்லே சாத்’ என்ற பெயரில் படம் இயக்குகிறார். இதில், மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜியாக அக்ஷய்குமார் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது “சிவாஜியாக நடிப்பது பெரிய பொறுப்பு. ராஜ் தாக்கரே நடிக்கச் சொன்னதால் இந்த வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவேன்” என்றார்.