

மும்பை: நடிகர் ஷாருக்கானுக்கு இன்று பிறந்தநாள். காலை முதலே பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அவரது நடிப்பில் வரும் 2023, ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது பதான். இந்தப் படத்தின் டீஸரை ஷாருக்கின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.
இந்த படத்தில் ஷாருக்கானுடன், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். ஆதித்யா சோப்ரா இந்த படத்தை தயாரித்துள்ளார். நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஹிர்த்திக் ரோஷன் ஆகியோர் இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.
இந்த படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளிவர உள்ளது. சுமார் 01.24 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த டீசரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் நிறைந்துள்ளன. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படம் பிடித்துள்ளனர். இந்த படத்தில் ஷாருக், உளவாளியா அல்லது குற்றச் செயல்களை செய்யும் நபரா என்பது தெரியவில்லை.
தற்போது ஷாருக், அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.