காதலரை பிரிந்தாரா ஹூமா குரேஷி?

காதலரை பிரிந்தாரா ஹூமா குரேஷி?
Updated on
1 min read

தமிழில், ரஜினியின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ படங்களில் நடித்தவர், இந்தி நடிகை ஹூமா குரேஷி. இவர் நடித்துள்ள ‘டபுள் எக்ஸ்எல்’ என்ற படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. இவர் இந்திப் பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான முடாசர் அசிஸை கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். அவருடன் இணைந்து ‘டபுள் எக்ஸ்எல்’ படத்தையும் தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படம் வெளியாகும் முன்பே இருவரும் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in