

பிரபாஸ், கீர்த்தி சனோன், சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘ஆதிபுருஷ்’. ராமாயணக் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை ஒம் ராவத் இயக்கியுள்ளார். படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான டீசர், கடும் விமர்சனத்தையும் சர்ச்சையையும் எதிர்கொண்டது.
இந்நிலையில், விஎப்எக்ஸ் காட்சிகளை உலகத் தரத்தில் உருவாக்கவும் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சிகளை சரி செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் படத்தை ஏப்ரல், மே மாதங்களில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பொங்கலுக்கு விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்கள் வெளியாவதாலும், தென்னிந்தியாவில் ‘ஆதிபுருஷ்’ வசூல் பாதிக்கப்படும் என்பதாலும் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தயாரிப்புத் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.