

மும்பை: அக்ஷய் குமாரின் ‘ராம் சேது’ திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களில் ரூ.26 கோடி வசூலித்துள்ளது.
இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அக்ஷய் குமாரின் ‘ராம் சேது’ படமும், சித்தார்த் மல்ஹோத்ராவின் ‘தேங் காட்’ திரைப்படமும் வெளிவந்தன. ஆனால், இந்த இரு படங்களுமே ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்கவில்லை என்று திரை விமர்சகர்கள் கூறுகின்றனர். எனினும் குஜராத், ராஜஸ்தான், பிஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய மா நிலங்களில் இவ்விரு படங்களும் குறிப்பிடத்தக்க வரவேற்பு பெற்றுள்ளன.
தென்னிந்தியாவிலும் இந்த இரு படங்களும் வெளியாகியுள்ளன. இதில், ராமர் பாலம் இயற்கையாக உருவானதா அல்லது ராமரால் கட்டப்பட்டதா என்பதை நிரூபிக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டது 'ராம் சேது' படத்தின் கதை. ‘தேங் காட்’ திரைப்படமானது, இறப்பிற்கு பின்னான கதையின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில், வெளியான இரண்டு நாட்களில் ‘ராம் சேது’ திரைப்படம் ரூ.26 கோடியை வசூலித்துள்ளதாகவும், ‘தேங் காட்’ திரைப்படம் ரூ.13.50 கோடி வசூலித்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. | வாசிக்க > ராம் சேது Review: அக்ஷய் குமாரின் மற்றொரு படம்!