

''ஒரு நாள் முன்னதாக தீபாவளியைக் கொண்டு வந்த இந்திய அணிக்கும் விராட் கோலிக்கு நன்றி'' என பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா பதிவிட்டுள்ளார்.
டி20 உலக கோப்பை சூப்பர்12 சுற்று போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா த்ரில் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்த கதை எனது வருங்கால சந்ததியினருக்கானது. மும்பை - சண்டிகர் விமானத்தில் கடைசி இரண்டு ஓவர்களை செல்போனில் பார்த்துக்கொண்டிருந்தேன். கிரிக்கெட் பிரியர் பைலட் வேண்டுமென்றே 5 நிமிடங்கள் தாமதப்படுத்தினார், யாரும் புகார் செய்யவில்லை.
பாண்டியாவும் டிகேயும் வெளியேறினர். பின்னர் அஸ்வின் வந்தார். வொயிட் பால் வீசப்பட்டது. இறுதி ரன்களை அடித்தார். ஒரு விமானத்திற்குள் கூட்டு கைதட்டல்களின் ஆரவாரத்தை நான் பார்த்ததில்லை.ரன்வேயில் இருக்கும்போது இதெல்லாம் நடந்தது. சிறந்த தருணம் அது..
நான் அதை என் தொலைபேசியில் பதிவு செய்ய விரும்பினேன். ஆனால் நான் இந்த விஷயங்களைச் செய்வதில் சமூக ரீதியாக மோசமானவன். ஒரு நாள் முன்னதாக தீபாவளியைக் கொண்டு வந்த இந்திய அணிக்கும் விராட் கோலிக்கு நன்றி'' என பதிவிட்டுள்ளார்.