படமாகிறது ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவார் வாழ்க்கை வரலாறு

படக்குழுவினர்
படக்குழுவினர்
Updated on
1 min read

ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. படத்தை மூன்று மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரில் வாழ்க்கை வரலாற்று படம் வெளியாக உள்ளது. சஞ்சய்ராஜ் கௌரிநந்தன் இயக்கும் இப்படத்தில் தேசிய விருது பெற்ற அனுப் ஜலோட்டா நடிக்கிறார். அவருடன், ஜஸ்வீர் சிங், ராகுல் ஜோஷி, எல். நித்தேஷ் குமார் மற்றும் ஜெயானந்த் ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தில் நடிக்கும் அனூப் ஜலோட்டா, ''படத்துடன் இணைந்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. மக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில், "எங்கள் திரைப்படம் ஹெட்கேவாரின் வாழ்க்கை பயணம், அவரது போராட்டங்கள் மற்றும் அவரது இயக்கங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமையும். ஆர்எஸ்எஸ் இன்று உலகின் மிகப்பெரிய சமூக அமைப்புகளில் ஒன்றாக உள்ளது என்பதன் மூலம் அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் திறன் நிறுவப்பட்டுள்ளது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in