"ஒரு தலைமுறையே ஹீரோவாக காரணமானவர்" - அமிதாப்பச்சனுக்கு பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து

"ஒரு தலைமுறையே ஹீரோவாக காரணமானவர்" - அமிதாப்பச்சனுக்கு பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து
Updated on
1 min read

நடிகர் அமிதாப் பச்சனின் 80ஆவது பிறந்த நாளையொட்டி திரையுலகம் மற்றும் பல்வேறு தரப்பைச் சேர்ந்த பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய 80-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான அமிதாப் 1969-ம் ஆண்டு திரைத்துறைக்குள் நுழைந்தவர். இந்திய அரசு அவருக்கு 1984-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 2001-ல் பத்ம பூஷன் மற்றும் 2015 இல் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. 2018-ல், தாதாசாகேப் பால்கே விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார். இதுதவிர, ஐந்து தேசிய திரைப்பட விருதுகள், 15 பிலிம்பேர் விருதுகள் மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். அண்மையில் அவர் 'பிரம்மாஸ்திரா', 'குட் பை' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எப்பொழுதும் என்னை ஊக்கப்படுத்திய ஒருவர்… நமது புகழ்பெற்ற இந்திய திரைப்பட சகோதரத்துவத்தின் சூப்பர் ஹீரோ 80க்குள் நுழைகிறார். என் அன்பான மற்றும் மரியாதைக்குரிய பிறந்தநாள் வாழ்த்துகள் அமிதாப் பச்சன்'' என்று பதிவிட்டுள்ளார்.


பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ''அமிதாப் பச்சன் ஜிக்கு 80வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்து மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளில் ஒருவர். நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள்'' என பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜய்தேவ்கன் அமிதாப் பச்சனுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழத்து தெரிவித்துள்ளார்.


நடிகர் அக்ஷ்ய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஒரு தலைமுறையே சினிமாவில் ஹீரோவாக விரும்புவதற்கு ஒரே காரணமான மனிதருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என் இன்ஸ்பிரேஷன், பச்சன் சார்! உங்களுக்கு 80வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in