எனது ராணி பெருமைப்படுத்துகிறார் - விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரன்வீர் சிங்

எனது ராணி பெருமைப்படுத்துகிறார் - விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரன்வீர் சிங்
Updated on
1 min read

2012ல் காதலிக்க ஆரம்பித்து 2018ல் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தனர் பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவரும். நட்சத்திர ஜோடிகளாக இருவரும் வலம்வரும் நிலையில் கடந்த சில தினங்களாக இவர்களை சுற்றி விவாகரத்து வதந்தி பரவி வருகிறது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய இருப்பதாக பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும்நிலையில் அதை ரன்வீர் சிங் திட்டவட்டமாக மறுத்துவருகிறார். எனினும், வதந்திகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

இதனிடையே, தீபிகா படுகோன் பிரபல நகைக்கடை மற்றும் வாட்ச் கம்பெனி ஒன்றின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை வலைதளங்களில் பகிர்ந்துள்ள ரன்வீர் சிங், "எனது ராணி நம்மை பெருமைப்படுத்துகிறார்" என்று பதிவிட்டு மீதான தனது காதலை மீண்டும் வெளிப்படுத்தி விவகாரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், விரைவில் ரன்வீர், தீபிகா இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இதை ரன்வீர் சில தினங்கள் வலைதளங்களில் உறுதிப்படுத்தி இருந்தார் என்று குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in