3 நாட்களில் ரூ.36 கோடி - வசூலில் நிதானமாக முன்னேறும் பாலிவுட் ‘விக்ரம் வேதா’

3 நாட்களில் ரூ.36 கோடி - வசூலில் நிதானமாக முன்னேறும் பாலிவுட் ‘விக்ரம் வேதா’
Updated on
1 min read

பாலிவுட்டில் வெளியாகியுள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் 3 நாட்களில் ரூ.36 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா'. படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இப்படத்தை 'விக்ரம் வேதா' பெயருடன் இந்தியில் இயக்கியது படக்குழு. இதில், மாதவன் கதாபாத்திரத்தில் சயீஃப் அலிகானும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இதனால், பாலிவுட்டில் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இப்படம் செப்டம்பர் 30-ல் திரையரங்குகளில் வெளியானது. வட மாநிலங்களில் படத்திற்கான வரவேற்பு எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் படம் பொறுமையாக பிக் அப் ஆகி வருகிறது. அதன்படி, படம் முதல் நாளில் ரூ.10.58 கோடியையும், இரண்டாவது நாளில் 12.51 கோடியையும், மூன்றாவது நாளில் ரூ.13.85 கோடியையும் வசூலித்து மூன்று நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ.36.94 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 5640 திரைகளில் வெளியான இப்படத்தின் பட்ஜெட் ரூ.175 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in