

''பிரம்மாஸ்திரா படத்தை மிகவும் ரசித்தேன். பெரிய திரையில் படம் பார்ப்பதற்கான அர்த்தம் இப்போது தெளிவாகிவிட்டது'' என பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் அயன்முகர்ஜி இயக்கத்தில் வெளியான படம் 'பிரம்மாஸ்திரா'. படம் உலக அளவில் வசூலில் ரூ.300 கோடியை நெருங்கி சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 'பிரம்மாஸ்திரா' குறித்து பேசியுள்ள நடிகர் ரன்வீர் சிங், ''நான் பிரம்மாஸ்திரா படத்தை மிகவும் ரசித்தேன். இதுவரை இந்தி சினிமாவில் பார்க்காததை பெரிய திரையில் பார்ப்பது அற்புதமாக இருந்தது. படக்குழுவின் முயற்சிகளை உண்மையில் பாராட்டுகிறேன். பெரிய திரையில் படங்களை பார்ப்பதற்கான அர்த்தம் இப்போது தெளிவாக புரிந்துவிட்டது. பெரிய திரையில் படத்தை பார்க்கும் காட்சி அனுபவத்தை ஒருபோதும் உங்களால் வீட்டில் பெற முடியாது. நீங்கள் தனியாக உங்கள் வீட்டில் உள்ள சோஃபாவில் அமர்ந்து பார்ப்போது போல் அல்ல. இது முற்றிலும் வேறுவகையான அனுபவம்'' என தெரிவித்துள்ளார்.
ரன்வீர் கபூர் தற்போது கரண் ஜோஹர் இயக்கத்தில் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.