மருத்துவமனையில் தீபிகா படுகோன் அனுமதி

மருத்துவமனையில் தீபிகா படுகோன் அனுமதி

Published on

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன், கடந்த சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த ‘புராஜெக்ட் கே’ படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர், மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமை இரவு அவருக்கு அசவுகரியமாக இருந்ததாகவும் இதய துடிப்பு அதிகரித்துக் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இப்போது நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அவர் தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in