என் கையை பிடித்ததிலிருந்து இப்போது ஷாப்பிங் பேக் வரை - மகளுக்கு அக்‌ஷய் குமாரின் பிறந்த நாள் வாழ்த்து

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்
Updated on
1 min read

தனது மகளின் 10-வது பிறந்த நாளையொட்டி நடிகர் அக்‌ஷய் குமாரின் நெகிழ்ச்சி பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மகள் நிதாரா தனது 10-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் அக்‌ஷய் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மகள் நிதாரா தனது தந்தை அக்ஷய் குமாருடன் பாலைவனத்தில் நடந்து செல்கிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அக்ஷய் குமார், ''என் கையைப் பிடிப்பதில் இருந்து இப்போது தன் சொந்த ஷாப்பிங் பேக்கை வைத்திருக்கும் வரை, என் மகள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இன்று அவளுக்கு 10 வயதாகிறது...இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...உலகம் வழங்குவது சிறந்ததாக இருக்கும். அப்பா உன்னை எப்போதும் நேசிக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு, அக்‌ஷய் குமார் ஒரு வீடியோவையும் படத்தையும் பகிர்ந்திருந்தார். அதில் அவர் "என் மகளை நேற்று ஒரு பொழுதுபோக்கு பூங்காவிற்கு அழைத்துச் சென்றேன். அவளது இரண்டு பொம்மைகளை வாங்கிக்கொண்டு அவளது புன்னகையை பார்த்தபோது என்னை ஒரு ஹீரோவாக உணர்ந்தேன்'' எனப் பதிவிட்டிருந்தார். அதற்கு ட்விங்கிள் கன்னா கமெண்டில் ஹார்டின் எமோஜியை பதிவிட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in