

அஜய் தேவ்கன், ரகுல் பிரீத் சிங் உட்பட பலர் நடித்துள்ள இந்திப் படம் ‘தேங் காட்’. இந்திரகுமார் இயக்கியுள்ள இந்தப் படம், அக்டோபர் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இதன் டிரெய்லர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டிரெய்லரின் கடைசிப் பகுதியில், கோட்சூட் அணிந்த சித்திரக்குப்தனாக வரும் அஜய் தேவ்கன், ஒரு நகைச்சுவைச் சொல்கிறேன் என்கிறார்.
பிறகு அவர் பேசும் வசனத்தில் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பதாகக் கூறி உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹிமன்சு ஸ்ரீவஸ்தவா வழக்குத் தொடுத்துள்ளார்.
ஜான்பூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கர்மாவின் கடவுளான சித்திரக்குப்தன் ஒரு மனிதனின் நல்ல மற்றும் கெட்ட விஷயங்களைப் பதிவு செய்பவராகக் கருதப்படுகிறார்.
அப்படிப்பட்ட கடவுளை, கோட் சூட் அணிந்து சித்தரித்திருப்பது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நவம்பர் 18-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.