ரஜினியை மீறிய பெரிய நடிகர் யாருமில்லை: ராதிகா ஆப்தே

ரஜினியை மீறிய பெரிய நடிகர் யாருமில்லை: ராதிகா ஆப்தே
Updated on
1 min read

'ரஜினியை மீறிய பெரிய நடிகர் யாருமில்லை. தமிழ் உச்சரிப்பு கஷ்டப்பட்ட போது ரஜினிதான் உதவினார். மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசி உதவி புரிந்தார்' என்று ராதிகா ஆப்தே தெரிவித்தார்.

"ரஜினி மீறிய பெரிய நடிகர் யாருமில்லை. அவர் மிகவும் அடக்காமனவர் மட்டுமன்றி ரொம்ப சிம்பிளாக இருப்பார். மிகவும் கடின உழைப்பாளி. அவருடைய கடின உழைப்பை கவனிப்பதே படப்பிடிப்பில் வியப்பளிக்கும் விதமாக இருந்தது" என்று ராதிகா ஆப்தே குறிப்பிட்டார்.

ரஜினிகாந்திடம் தமிழ் தெரியாது என்பதால் மராத்தியில் பேசினீர்களா என்று கேட்டதற்கு, "அவரிடம் மராத்தியில் பேசித் தான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பில் ஆங்கிலத்தில் பேசிக் கொள்வோம்" என்று தெரிவித்தார் ராதிகா ஆப்தே.

"ஆங்கிலத்தில் பேசிக் கொண்டாலும், அவரிடம் என்னுடைய முதல் கேள்வியே உங்களுக்கு மராத்தி தெரியுமா என்பது தான். தனக்கு மராத்தி தெரியும் என்றவுடன் இருவரும் மராத்தியில் பேசிக் கொண்டோம்" என்றும் ராதிகா ஆப்தே நினைவு கூர்ந்தார்.

மராத்தியில் என்னவெல்லாம் பேசிக் கொண்டீர்கள் என்று கேட்ட போது, "அவரிடம் மராத்தியில் பேசுவீர்களே என்ற கேட்ட போது பேசுவேன் என்றார். ஆனால் மராத்தியில்ல் கொஞ்சம்தான் பேசுவேன் ஏனென்றால் நான் பெலகோவானில் (கர்நாடகா) இருந்து வந்தவன்" என்று ரஜினி தெரிவித்ததாக ராதிகா ஆப்தே குறிப்பிட்டு இருக்கிறார்.

'கபாலி' படப்பிடிப்பின் போது இயக்குநர் ரஞ்சித் கூறும் வழிமுறைகளை ரஜினிகாந்த் தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தனக்கு எடுத்துரைத்தாக ராதிகா ஆப்தே தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in