அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கரோனா பாதிப்பு

அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கரோனா பாதிப்பு

Published on

இந்திய சினிமாவின் மூத்த நடிகரும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் கரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறார். தொற்று பாதிப்பை ட்விட்டரில் உறுதிசெய்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கரோனா சோதனை செய்துகொள்ள கேட்டுகொண்டுள்ளார். இதனிடையே, தொற்றில் இருந்து அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அமிதாப் பச்சனுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, 2020ல் கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தபோதும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் பச்சன் நடிப்பில், 'பிரம்மாஸ்திரா பார்ட் 1' அடுத்த மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதேநேரம், 'கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் புதிய சீசனும் தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர, 'உஞ்சாய்', 'குட்பை', 'புராஜெக்ட் கே' மற்றும் 'தி இன்டர்ன்' ரீமேக் உட்பட பல படங்கள் அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in