Published : 22 Aug 2022 06:03 PM
Last Updated : 22 Aug 2022 06:03 PM

“மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்” - ஹிர்த்திக் ரோஷன் விளம்பரம் குறித்து ஜொமோட்டோ

பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடித்த விளம்பரம் சர்ச்சையானதையடுத்து உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ வருத்தம் தெரிவித்துள்ளது.

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் அண்மையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஜோமோட்டோ நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த விளம்பரத்தில் மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் (Mahakaleshwar Temple) கோயிலின் பிரசாதம் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது.

இதற்கு அங்குள்ள இரண்டு அர்ச்சகர்கள், ’’கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பிரசாதத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இந்த விளம்பரம் இருக்கிறது. அதை திரும்பப் பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் சிங்கிடம் புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து இந்த விளம்பரம் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் இந்த விளம்பரத்துக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், அந்த உணவு விநியோக நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

''நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். யாருடைய மனதையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. உஜ்ஜைனி மக்களின் உணர்வுகளை ஆழமாக மதிக்கிறோம். அந்த விளம்பரம் இனி வெளிவராது'' என ஜொமோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x