பாய்காட் ட்ரெண்ட் என்பது ஒரு நகைச்சுவை - நடிகை டாப்ஸி 

பாய்காட் ட்ரெண்ட் என்பது ஒரு நகைச்சுவை - நடிகை டாப்ஸி 
Updated on
1 min read

''பார்வையாளர்களுக்கு ஒரு படம் பிடிக்கும்பட்சத்தில் அவர்கள் போய் பார்க்கப்போகிறார்கள். இல்லை என்றால் தவிர்த்துவிடப்போகிறார்கள். இதில் பாய்காட் ட்ரெண்ட் என்பது ஒரு நகைச்சுவை தான்'' என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகை டாப்சி நடித்த திரைப்பபடம் 'டோபாரா'. கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், ட்விட்டரில் 'பாய்காட் டோபாரா' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

தற்போதைய இந்த ட்ரெண்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள டாப்ஸி, ''பாய்காட் மற்றும் இதுபோன்ற விம்ரசனங்கள் நாள் தோறும் தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் மக்களுக்கு அது சலிப்பை ஏற்படுத்திவிடும். பயன்றறதாகிவிடும். இதன் பாதிப்பு குறித்து என் படத்தில் கூட ஒரு வசனம் உள்ளது.

நான் திரைத்துறையில் உள்ள மற்றவர்களைப்பற்றி சொல்லமுடியாது. ஆனால், எனக்கும், அனுராக் காஷ்யப்புக்கும் இது ஒரு ஜோக். பார்வையாளர்களுக்கு ஒரு படம் பிடிக்கும்பட்சத்தில் அவர்கள் போய் பார்க்கப்போகிறார்கள். இல்லை என்றால் தவிர்த்துவிடப்போகிறார்கள். ஆனால், பாய்காட் என ட்ரெண்ட் செய்வது பார்வையாளர்களின் ரசனையை மட்டுப்படுத்துவது போல. டோபாரா திரைப்படம் ஸ்பானிஷ் படத்தின் ரீமேக் இல்லை'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in