“அனுராக் காஷ்யப் இஸ் பேக்” - நெட்டிசன்கள் கொண்டாடும் டாப்ஸியின் ‘டோபாரா’

“அனுராக் காஷ்யப் இஸ் பேக்” - நெட்டிசன்கள் கொண்டாடும் டாப்ஸியின் ‘டோபாரா’
Updated on
1 min read

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி நடித்துள்ள 'டோபாரா' பாலிவுட் படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து ட்விட்டரில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி,பவைல் குலாட்டி, நாசர், ராகுல் பாட் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'டோபாரா'. கடந்த 2018-ம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான 'மிராஜ்' (Mirage) படத்தின் அதிகாரபூர்வ தழுவலாக உருவாகியுள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

லண்டன் திரைப்பட விழா மற்றும் ஃபேன்டாசியா திரைப்பட விழா 2022 உட்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் டோபரா ஏற்கெனவே திரையிடப்பட்டது. இந்நிலையில், ரசிகர்கள் பலர் இந்தப் படம் குறித்த தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். மேலும், அனுராக் காஷ்யப் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார் என்றும், படத்தின் திருப்பங்களை ரசித்ததாகவும் பதிவிட்டுள்ளனர்.

படம் தொடர்பாக நவ்ஜோத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அனுராக் காஷ்யம் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். படம் உங்களை ஆச்சரியப்படுத்தி வேரூன்ற செய்யும். திரையரங்குகளில் படத்தை பார்க்கவும். செலவழிக்கும் பணத்திற்கு தகுதியான திரைப்படம்'' என பதிவிட்டுள்ளார்.

அஹமத்,''டோபாரா ஒரு வித்தியாசமான முயற்சி. படத்தில் வரும் திருப்பங்களை வெகுவாக ரசித்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. "பாப்கார்ன் பொழுதுபோக்கு" படம் இது'' என பதிவிட்டுள்ளார்.

கே-13 படத்தின் இயக்குநர் பரத் நீலகண்டன், ''டோபாரா ஒரு அற்புதமான படம். செயலற்ற மூளை செல்களில் சிலவற்றை பற்றவைக்க விரும்பினால், படத்திற்கு செல்லுங்கள்'' என பதிவிட்டுள்ளார்.

கரண் குந்த்ரா, ''இறுதிவரை உங்களை கவர்ந்திழுக்கும் இறுக்கமான படம் டோபாரா'' என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in