கவனம் ஈர்க்கும் கஹானி 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கவனம் ஈர்க்கும் கஹானி 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Published on

கஹானி படத்தின் இரண்டாம் பாகமான கஹானி 2-ன் முதல் போஸ்டர், கடத்தி கொலை செய்ததற்காக துர்கா ராணி சிங் என்னும் பெண் தேடப்பட்டு வருகிறார் என்று அந்தக் கதாபாத்திரத்தின் சுய விவரங்களோடு கவனம் ஈர்க்கும் விளம்பரமாக வெளியாகியுள்ளது.

தன் கணவனைத் தேடி லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் கர்ப்பிணிப் பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களை நுட்பமாகப் பேசிய திரைப்படம் கஹானி. இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் வித்யா பாலன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ''கஹானி 2'' படத்தின் முதல் டீஸர் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இதில், ''கடத்தி, கொலை செய்ததற்காக துர்கா ராணி சிங் என்னும் பெண் தேடப்பட்டு வருகிறார். 36 வயதான துர்கா, 5.4 அடி உயரத்தோடு சிவப்பாக இருப்பார். தகவல் தெரிந்தவர்கள் கஹானி2-ன் ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்'' என அறிவிப்பு விளம்பரம் போல போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கஹானி படத்தில் நடித்திருந்த அர்ஜூன் ராம்பால் இப்படத்திலும் நடிக்கிறார். சுஜோய் கோஷ் இயக்கும் இப்படம் டிசம்பர் 2, 2016-ல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in