

புதுடெல்லி: இந்திய திரை உலகில் அதிகம் வரி செலுத்தும் நபராக அக்ஷய் குமார் உள்ளார். அவருக்கு வருமான வரித் துறை கவுரவ சான்றிதழ் வழங்கியுள்ளது.
பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார், இந்திய திரைத் துறையில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அதற்கேற்ற அள வில் வரியும் செலுத்துகிறார். அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளாக வருமான வரித் துறையிடமிருந்து கவுரவ சான்றிதழை பெற்று வருகிறார். தற்போது அக்ஷய் குமார் பிரிட்டனில் படப்பிடிப்பில் உள்ளார். இந்தச் சான்றிதழை அவர் சார்பாக அவரது அணியினர் பெற்றுள்ளனர்.