

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது தனித்துவமான குணதியங்களுக்கும், ஆடை அலங்காரத்திற்கும் பெயர் பெற்றவர். தன்னுடைய விசித்திரமான ஆடை தேர்வால் சமூக வலைதளங்களின் பேசு பொருளாகவும் அவ்வப்போது ரன்வீர் சிங் ஆளாகி வருகிறார்.
அந்தவகையில் ரன்வீர் சிங்கின் புதிய போட்டோஷுட் புகைப்படங்கள் இன்று இணையத்தில் வெளியானது. இந்த புகைப்படங்களில் ரன்வீர் ஆடையின்றி இருந்தார். இதற்கு இணையத்தில் பலரும் ரன்வீர் ”மிக தைரியசாலி, அவர் யாருடைய கருத்தையும் பொருட்படுத்தவில்லை” என பாராட்டி இருந்தனர். சிலர் அவரது புகைப்படங்களை விமர்சித்திருந்தனர்.
இந்த சூழலில் ரன்வீரின் புகைப்படங்கள் குறித்து எம்.பியும், நடிகையுமான மிமி சக்ரவர்த்திதனது ட்விட்டர் பக்கத்தில், ”பலரும் ரன்வீரின் புகைப்படங்களை கவர்ச்சியாக இருக்கிறது என்று பாராட்டி உள்ளார்கள். இந்த போட்டோஷூட்டை ஒரு பெண் ஏற்று நடித்திருந்தால், இதே மாதிரியான பாராட்டு ஒரு பெண்ணுக்கு கிடைக்குமா அல்லது அவள் வீட்டை கொளுத்துவேன், அவளை கொல்லுவேன் என மிரட்டி அவளது நடத்தை குறித்து தவறாக பேசுவார்களா என எண்ணிப் பார்க்கிறேன் .
நாம் சமத்துவம் பற்றி பேசுகிறோம், அது எங்கே இருக்கிறது? உங்கள் கண்ணோட்டம் எதையாவது மாற்றலாம் அல்லது அழிக்கலாம். இந்த விஷயத்தில் நம் கண்ணோட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். ஏனெனில் நமது உடல் நிறைய தியாகங்களுடன் வெளிப்படுகிறது. என்னை நம்புங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.