ஃபோபியா படத்துக்கு சென்சார் கட் இல்லை: இயக்குநர் மகிழ்ச்சி

ஃபோபியா படத்துக்கு சென்சார் கட் இல்லை: இயக்குநர் மகிழ்ச்சி
Updated on
1 min read

'ராகினி எம்.எம்.எஸ்.' பட இயக்குநர் பவன் கிரிபலானி, தான் இயக்கியுள்ள 'ஃபோபியா' திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை துறையினர், படத்தின் எந்த பகுதியையும் நீக்கவில்லை என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

'ஃபோபியா' படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியானது. இந்தப் படத்தில் பொது இடங்களைக் கண்டாலே பயப்படும் பெண் வேடத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.

படம் குறித்துப் பேசிய இயக்குநர், '' 'ஃபோபியா' படத்தின் கரு வயது வந்தவர்களுக்கானது என்பதால், சென்சாருக்கு போகும்போது கவலையாக இருந்தேன். அந்த சீனை தூக்குங்கள், இதில் மாற்றம் செய்யுங்கள் என்றெல்லாம் சொல்வார்களோ என்று நினைத்து பயந்தேன். ஆனால் சென்சார் அதிகாரிகள் என்னை அழைத்து, படம் வசீகரிக்கும் விதமாக இருக்கிறது, படத்தின் எந்தப் பகுதியையும் நாங்கள் நீக்கவில்லை என்று கூறினர்.

மேலும் அவர்கள், இது வலிமையான களத்தைக் கொண்ட திரைப்படம். படத்தின் பகுதிகளை நீக்கினால், பார்வையாளர்களின் அனுபவத்தை நீர்த்துப் போகச் செய்யும் நிலை ஏற்படும் என்று கூறினர்.

வழக்கமாக படக் காட்சிகள் மீது மிகுந்த கண்டிப்புடன் இருக்கும் தணிக்கை வாரியம் என்னுடைய படத்தைப் புரிந்துகொண்டது சந்தோஷமாக இருக்கிறது. 'ஃபோபியா' ஒரு உளவியல் சார்ந்த த்ரில்லர் படம். இது நிச்சயம் ஹாரர் படங்களில் இருந்து வித்தியாசமான படமாக இருக்கும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in